ABC எனும் கம்பனி தனது உற்பத்திகளை விற்பனை செய்வதற்கு பல விற்பனையாளர்களை சேவைக்கமர்த்தியுள்ளது. ஒவ்வொரு விற்பனை யாளருக்கும் வருடத்தில் அடைய வேண்டிய இலக்கொன்று வழங்கப்பட்டுள்ளதுடன் 2017 ஆம் வருடத்திற்கான அவர்களது செயற்திறன் காலாண்டுகளில் பதியப்பட்டு sales எனும் கோப்பில் சேமிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு விற்பனையாளரும் தனித்தனியாக செய்த விற்பனைகளை பகுப்பாய்வு செய்வதற்காக கீழே தரப்பட்டுள்ள பின்வரும் அறிவுறுத்தல்களுக்கமைய விரிதாள்  பூரணப்படுத்தப்படல் வேண்டும். 

தரப்பட்டுள்ள இணைப்பின் ஊடாக விரிதாளைப் பதிவிறக்கம்  செய்து  git_index_no_Q43 எனும் பெயரில் சேமிக்கவும்.
 

    1. SP01 எனும் விற்பனையாளர் செய்த விற்பனைகளின் மொத்தத்தைக் கணிப்பதற்கு பொருத்தமான சூத்திரத்தை கலம் G2 இல் எழுதவும்.
    2. ஏனைய விற்பனையாளர்களது மொத்த விற்பனையைக் கணிப்பதற்கு G2 கலத்தில் எழுதிய சூத்திரத்தை கலங்கள்  G3 முதல்  G7 வரை பிரதி செய்யவும். 

  1. SP01 எனும் விற்பனையாளர் மேற்கொண்ட விற்பனைகளின் காலாண்டுச் சராசரியைக் கணிப்பதற்குரிய பொருத்தமான சூத்திரத்தை H2 கலத்தில் உள்ளிடவும்.  H2 கலத்தில் எழுதப்பட்ட  சூத்திரத்தை கலங்கள்   H3 முதல்   H7 வரை பிரதி செய்து ஏனைய விற்பனையாளர்களது சராசரியைக் காணவும். 

    1. H மற்றும் I எனும் நிரல்களுக்கு (column) இடையில் ஒரு நிரலை உட்செலுத்தி அதை “Performance” எனபெயரிட்டு தடித்த எழுத்தில்  (boldface)  அமைத்து ஒரு கலத்தினுள் அமையுமாறு   சுற்றமைக்குக.  (wrap)
    2. கீழே காட்டப்பட்டுள்ள சமன்பாட்டிற்கு அமைய ஒவ்வொரு விற்பனையாளரதும் செய்திறனை கணிப்பதற்குப் பொருத்தமான சூத்திரத்தை  I2 கலத்தில் எழுதவும் கலம்   I2  இலுள்ள சூத்திரத்தை கலங்கள்  I3 முதல்  I7  வரை பிரதி செய்து ஏனைய விற்பனையாளர்களின் செயற்றிறனைக் கணிக்கவும். 

      Performance = Total Sales –Annual Target

    3. கலங்கள் I2 முதல் I7 வரையான வீச்சத்தை இலக்கமுறைக்கு வடிவமைத்து மறைபெறுமானங்கள் அடைப்புத் தசமங்களின்றியும் “()”  காட்டப்படுமாறும் வடிவமைக்க.  
  2. performance என்பதில் நேர்ப்பெறுமானங்களைக் கொண்டவர்களுக்கு மாத்திரம் தரகு commission கொடுப்பனவு வழங்கப்படும். பின்வரும் சூத்திரத்தை J2  கலத்தில் உட் செலுத்தி அதனை J3 முதல்   J7 வரை பிரதி செய்து தரகு கொடுப்பனவிற்கு தகுதியான விற்பனையாளர்களைத் தீர்மானிக்கவும் :

    =IF(I2>0, "Yes", "No")


  3. ஒவ்வொரு விற்பனையாளரினதும் காலாண்டு விற்பனைகளைக் காட்டக்கூடியவாறு கீழே தரப்பட்டவாறு நிரல் வரைபை ஒத்த வரையறையொன்றை வரைக. 
cahart
உமது ஆவணத்தை சேமித்து பதிவேற்றம் செய்யவும்.

Select file to upload: