வகுப்பாசிரியர் ஒருவர் மாணவர்களின் பரீட்சைப் புள்ளிகளை விரிதாளொன்றில் பேணுகின்றார். அதனை இணைப்பிலிருந்து (Link) பதிவிறக்கம் செய்து பெற்றுக்கொள்ளலாம். இவ்விரிதாளை பின் கீழே தரப்பட்டுள்ள அறிவுறுத்தல்களைப் பின்பற்றி பூரணப்படுத்துவதன் மூலம் மாணவர்களின் செயற்றிறனைப் பார்ப்பதோடு வகுப்பில் பரிசில் பெறும் மாணவர்களின் செயற்றிறனைப் பார்ப்பதோடு வகுப்பில் பரிசில் பெறும் மாணவர்களைத் தீர்மானிக்கலாம்.  

விரிதாளை பதிவிறக்கம் செய்து அதனை சுட்டெண்ணையும் வினா இலக்கத்தையும் கொண்டு சேமிக்க. (உ.ம். கோப்புப்பெயர் : 12345_Q03)

விரிதாளை பதிவிறக்குக

  1. ஒவ்வொரு மாணவனினதும் மொத்தப் புள்ளியைக் (Total Marks) கணிக்க வேண்டும். கலம்  E2 இல் சூத்திரத்தை எழுதி   2010_S01 மாணவனின் மொத்தப் புள்ளியைக் காண்க. 
  2. கலம் E2 இலுள்ள சூத்திரத்தை E3-E11 வரையுள்ள கலங்களுக்கு பிரதி செய்து ஏனைய மாணவர்களுக்கு மொத்தப்புள்ளியை பெறுக. 
 1. வகுப்பில் பாிசில் பெறும் மாணவனை அடையாளங்காண அதிகூடிய சராசரிப்புள்ளியைப் (average mark) பெற்ற மாணவனைக் கண்டறிய வேண்டும்.
  1. மாணவன் 2010_S01 இன் சராசரிப்புள்ளியைக் கணிக்கவும் F2 இல் சூத்திரதை்தை எழுதி அதனை F3-F11 வரையான கலங்களுக்குப் பிரதி செய்து மற்றைய மாணவர்களினதும் சராசரிப் புள்ளியைக் கணிக்க .
  2. "Highest Average இனை  E14  இல் இட்டு   boldface வழங்குக. கலத்தினுள் Text ஐ wrap செய்க.
  3. அதிகூடிய சராசரியைப் பெற்ற மாணவனின் புள்ளியை கலம் F14 இல் பெறுவதற்குரிய சூத்திரத்தை எழுதுக.
 2. 2010_S01 என்ற மாணவன் பாடரீதியாகப் பெற்ற புள்ளிகளைக் கணிப்பதற்கு தரவு முகப்படையாளங்களுடன் கூடிய வட்டவரைபை (Pie chart) வரைக.
 3. “Performance in Maths” எனும் தலைப்பில் பொருத்தமான வரைபொன்றை வரைந்து Maths” பாடத்தில் ஒவ்வொரு மாணவனினதும் புள்ளிப் பரம்பலைக் காட்டுக.
விரிதாளைச் சேமித்து பதிவேற்றுக.
 
Select file to upload: