sales.xls விரிதாளை( spreadsheet) பதிவிறக்கம் செய்க sales.xls.xlsx
  1. குறித்த ஒரு நாளில்  புத்தகக் கடையொன்றில் நடைபெறும் சில விற்னைகளைக் காட்டும் sales.xls விரிதாள் (உரு1) ஐ உமது கணினிக்குப் பதிவிறக்கஞ் செய்க.
  2. File Explorer ஐத் திறந்து sales.xls ஐத் தெரிந்தெடுக்கMicrosoft Excel ஐப் பயன்படுத்தி அதனைத் திறப்பதற்கு இரண்டு தடவை சொடக்குக.

  3. நிரல் B இற்குப் பின்னர் ஒரு புதிய நிரலைச் செருகிநிரல் C (C1 தொடக்கம் C6 வரையுள்ள கலங்கள்) உரு 2 இல் தரப்பட்டுள்ளவாறு தரப்பட்ட தரவுகளை அதில் நுழைக்க.


  4. பென்சில்களின் (pencils)  விற்பனைக்கான தொகையைக் (Amount) கணிப்பதற்குக் கலம் D2 இற்கு ஒரு தகுந்த சூத்திரத்தைச் செருகுக. குறிப்பு: தொகை(Amountஆனது பின்வரும் சமன்பாட்டைப் பயன்படுத்தித் கணிக்கப்படுகின்றது

    Amount= Unit Price Quantity

  5. ) D3 தொடக்கம் D6 வரையுள்ள வீச்சுக்கு, ஏனைய உருப்படிகளுக்கான தொகைகளைப் பெறுவதற்கு நகல் செய்க.

  6. எல்லா உருப்படிகளுக்கும் 2% கழிவு தரப்படுமெனின், பென்சில்களுக்குத் (pencils) தரப்பட்ட மொத்தக் கழிவைக் கணிப்பதற்குக் கலம்  E2 இல் ஒரு சூத்திரத்தைச் செருகுக.

    குறிப்பு: உமது சூத்திரத்தில் கலம் B7 ஐப் பயன்படுத்த வேண்டும்கழிவானது பின்வரும் சமன்பாட்டைப் பயன்படுத்திக் கணிக்கப்படுகின்றது

    Discount=Amount  x  2/100

  7. ஏனைய உருப்படிகளுக்கான கழிவுகளைப் பெறுவதற்கு மேற்குறித்தசூத்திரத்தை E3 தொடக்கம் E6 வரையுள்ள வீச்சுக்கு நகல் செய்க.

  8. கலம் F1 இற்கு மொத்தம் (ரூ.)  (Total(Rs.))  உரையாக நுழைக்க. (அது உரு 3 இல் காட்டியவாறு காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்பதைக் கவனிக்க)

  9. பென்சில்களின் விற்பனையினூடாகப் பெறப்பட்ட மொத்தத்தைக்கணிப்பதற்குக் கலம் F2 இல் பொருத்தமான சமன்பாட்டைச் செருகி, ஏனைய உருப்படிகளின் விற்பனைகளினூடாகப் பெறப்பட்ட மொத்தங்களைக் கணிப்பதற்கு அதனை F3 தொடக்கம் F6 வரையுள்ள வீச்சுக்கு நகல் செய்க

    குறிப்பு: ஒவ்வோர் உருப்படியினதும் விற்பனைகளினூடாகப் பெறப்பட்ட மொத்தம் பின்வரும் சமன்பாட்டைப் பயன்படுத்திக் கணிக்கப்படுகின்றது.

    Total= Amount - Discount

  10. எல்லா உருப்படிகளினதும் விற்பனைகளினூடாகப் பெறப்பட்ட முழு மொத்தத்தை (grand total(-துF2 தொடக்கம் F6 வரையுள்ள கலங்களின் கூட்டல்) காட்டுவதற்குக் கலம் F7 இற்கு ஒரு பொருத்தமான சமன்பாட்டைச் செருகுக.

  11. உருப்படிகளின் (F2 தொடக்கம் F6 வரை) விற்பனைகளினூடாகப் பெறப்பட்ட தொகைகளைப் Book shop Sales என்னும் தலைப்புள்ள ஒரு  வட்டவரைபாகக் (pie chart) காட்சிப்படுத்துக.

  12. உமது ஆவணத்தை Nic_no.xls ஆகச் சேமித்து பதிவேற்றஞ் செய்க.

Select file to upload: